பெய்ஜிங்: சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா தகுதி பெற்றார். 3வது சுற்றில் குரோஷியாவின் டோனா வேகிச்சுடன் (28 வயது, 20வது ரேங்க்) நேற்று மோதிய ஆண்ட்ரீவா (17 வயது, 22வது ரேங்க்) 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். இப்போட்டி 2 மணி, 29 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கேத்தி வோலினெட்சை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்), கின்வென் ஸெங் (சீனா), அமண்டா அனிசிமோவா, மேடிசன் கீஸ் (அமெரிக்கா), மாக்தா லினெட் (போலந்து), கரோலினா முச்சோவா (செக்.), கிறிஸ்டினா புக்சா (ஸ்பெயின்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
The post சீனா ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஆண்ட்ரீவா appeared first on Dinakaran.