×

இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி 3-2 என தொடரை கைப்பற்றியது

லண்டன்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே 5வது ஒரு நாள் போட்டி நேற்று, பிரிஸ்டலில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.2 ஓவரில் 309 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. 25 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன் எடுத்த இங்கிலாந்து, அடுத்த 107 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 107, ஹாரி புரூக் 72, பில் சால்ட் 45 ரன் அடித்தனர். ஆஸி. பவுலிங்கில் டிராவிஸ் ஹெட் 4, மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, ஆரோன் ஹார்டி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 31, மத்தேயு ஷார்ட் 58 ரன்னில் (30 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆக, 20.4ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 49 ரன் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் 2 போட்டியில் வென்றிருந்த ஆஸி. 3-2 என தொடரை கைப்பற்றியது. டிராவிஸ்ஹெட், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

 

The post இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி 3-2 என தொடரை கைப்பற்றியது appeared first on Dinakaran.

Tags : Australia ,England ,London ,Bristol ,Dinakaran ,
× RELATED பும்ராவை விமர்சித்த வீராங்கனை மன்னிப்பு