- சமூக நீதி விழிப்புணர்வு கூட்டம்
- அருப்புக்கோட்டை
- அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரி
- விருதுநகர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு
- விருதுநகர்
- மாவட்டம்
- சமாஜ்வாடி கண்ணன்
- செல்லத்தை
அருப்புக்கோட்டை, செப்.30: விருதுநகர் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமை வகித்து பேசினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்லத்தாய் வரவேற்றார்.
இதில், அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ், புள்ளியியல் ஆய்வாளர் விஜயலட்சுமி, தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, கணினி வழி குற்றப்பிரிவு ஆய்வாளர் மீனா, மனிதநேய ஆய்வாளர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு அரசு உறுப்பினர் முகமது எகியா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.
இதில் சமூகநீதி, போதைப் பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கணினி வழியான குற்றங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிப் பேசினர். முடிவில் கல்லூரி செயலாளர் சங்கரசேகரன் நன்றி கூறினார். இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post சமூக நீதி விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.