×
Saravana Stores

கலியாவூரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

செய்துங்கநல்லூர், அக். 26: முறப்பநாடு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் அருப்புக்கோட்டைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு பைப் லைன் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின்போது கலியாவூர் தேவர் தெரு பள்ளிவாசல் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் வழியில் கழிவு நீரோடையில்மணலை அள்ளி போட்டுள்ளனர். இதனால் ஓடை அடைக்கப்பட்டு கழிவுநீர் சீராக செல்லாமல் கடந்த ஒரு வார காலமாக சாலையில் தேங்கி நிற்கிறது. இந்த வழியாகத்தான் இஸ்லாமியர்கள் பள்ளிவாசலுக்கு செல்வார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியரும் இவ்வழியாகத்தான் செல்கின்றனர்.

கழிவுநீர் ஒரு வாரமாக தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கழிவுநீருடன் மழைநீரும் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. எனவே உயரதிகாரிகள், இப்பகுதியை நேரில் பார்வையிட்டு கழிவுநீர் ஓடையில் கொட்டப்பட்டுள்ள மணலை அப்புறப்படுத்தி தண்ணீர் சீராக செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கலியாவூரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Kaliavoor ,Karadanganallur ,Aruppukkottai ,Kaliavoor Dewar Street ,
× RELATED கைத்தறி பாதுகாப்பு சட்டத்தின் மூலம்...