- அட்டைப்பெட்டி
- திருப்பூர்
- தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கோவை பொதுக்குழு
- திருமுருகன் பூண்டி, திருப்பூர்
- சிவகுமாரின்
- தின மலர்
திருப்பூர்: தென்னிந்திய அட்டைபெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கோவை மண்டல பொதுக் குழு கூட்டம் நேற்று திருப்பூர், திருமுருகன் பூண்டியிலுள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிவக்குமார் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதில், அட்டைப்பெட்டி தயாரிக்கும் மூலப்பொருளான கிராப்டு காகிதம் கடந்த ஒரு மாதத்தில் ரூ.3 ஆயிரம் விலை ஏற்றப்பட்டுள்ளது. இது அட்டைப்பெட்டி உற்பத்தி தொழிலுக்கு பேராபத்தை தந்துள்ளது. அதுபோல், மின்சார கட்டணமும் உயர்ந்துள்ளது. எனவே, அட்டைப்பெட்டிக்கு இன்று (நேற்று) முதல் 15 சதவிகிதம் விலை உயர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்த விலை உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post மூலப்பொருட்கள் விலை உயர்வால் அட்டைபெட்டி விலை 15% அதிகரித்தது appeared first on Dinakaran.