×

புரட்டாசி 2வது சனி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பல்லடம், செப்.29: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் மசநல்லாம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் வட்டாரத்தில் தொங்குட்டிபாளையம் ஊராட்சி மசநல்லாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமினை பொங்கலூர் ஒன்றியக் குழு தலைவர் குமார் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் வரவேற்றார். திருப்பூர் மருத்துவக்கல்லூரி சிறப்பு மருத்துவர்கள், பொங்கலூர் வட்டார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். இம்முகாமில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருத்துவ பெட்டகங்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் சித்தா பிரிவு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்கள் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பொங்கலூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பாலுசாமி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் அபிராமி அசோகன், தொங்குட்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரியா நடராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, லோகு பிரசாந்த், ஊராட்சி துணைத்தலைவர் பத்மா ஆனந்தன், ஊராட்சி செயலாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன் நன்றி கூறினார்.

The post புரட்டாசி 2வது சனி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Puratasi 2nd Saturday ,Perumal Temples ,Palladam ,Varumun ,Kapom ,Project ,Pongalur Union Masanallampalayam ,Public Health ,Tongutipalayam Oratchi Masanallampalayam Uratchi Uratchee Uratchee Secondary School ,Pongkalur District ,Puratasi ,2nd Saturday Perumal ,Temples ,Dinakaran ,
× RELATED பல்லடத்தில் நாளை கடையடைப்பு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு