×
Saravana Stores

முத்துப்பேட்டை அருகே ராணுவர் காலனி; மயான கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

முத்துப்பேட்டை, செப். 29: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை முன்னாள் இராணுவத்தினர் காலனி எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் எலும்பு கூடாக நிற்கும் மயான கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை முன்னாள் ராணுவத்தினர் காலனி, கொல்லக்காடு, கிழக்கு பகுதியில் மற்றும் சுற்று பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பயன்பாட்டிற்கு அதே பகுதியில் உள்ள கந்தபரிசான் ஆறு கரையோரம் ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் பொது மயானம் கட்டிடம் உள்ளது. சுமார் 22 வருடங்களுக்கு முன்பு 2001 – 2002ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மயான கட்டிடம் தற்போது முற்றிலும் பொலிவிழந்து அதன் மேல் சிலாப் பகுதி சிமிண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது.

அதேபோல் இந்த கட்டிடத்தின் தாங்கும் பில்லர்கள் எந்தநேரத்திலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் இருக்கும் கட்டிடத்தை கண்டு அப்பகுதி மக்கள் ஒவ்வொரு முறையும் சடலத்தை எரிக்க வரும்போது மிகுந்த அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இதனால் இந்த பழுதடைந்த பொது மயான கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

The post முத்துப்பேட்டை அருகே ராணுவர் காலனி; மயான கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Army ,Colony ,Muthupet ,Muthuppet ,Jambuwanoda ,Tiruvarur District, ,Dinakaran ,
× RELATED ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் கோவையில் நாளை முதல் தொடக்கம்