புதுடெல்லி: நாடு முழுவதும் வரும் அக்டோபர் 2ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடக்க உள்ளன. இது குறித்து ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் வரும் அக்டோபர் 2ம் தேதி 2.55 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இதில், ‘சப்கி யோஜனா, சப்கா விகாஸ்’ திட்டத்தின் கீழ் 20,000 கல்லூரி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்குவதும், தூய்மை இந்தியா, பிரதமர் ஆவாஸ் யோஜனா போன்ற அரசின் அனைத்து முதன்மைத் திட்டங்களின் நிலையை அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் இணையதளத்தில் வெளியிடுவதும் சப்கி யோஜனா சப்கா விகாஸ் திட்டத்தின் நோக்கம். இதற்காக, ஐஐடி டெல்லியால் ஒருங்கிணைக்கப்பட்ட உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் 20,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்’’என்றனர்.
The post அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள சிறப்பு கிராம சபைகளில் 20,000 மாணவர் பங்கேற்பு appeared first on Dinakaran.