- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- லங்கன் கடற்படை
- ராகுல் காந்தி
- புது தில்லி
- சக்திவேல்
- செல்வம்
- பூம்புகார்
- சீர்காழி
- மயிலாதுதுரை மாவட்டம்
- நெடுந்தீவு
புதுடெல்லி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, பூம்புகாரை சேர்ந்த செல்லத்துரை என்பவரது விசைப்படகு, சக்திவேல்,செல்வம் என்பவரது இரண்டு பைபர் படகுகளில் 37 மீனவர்கள் கடந்த 20ம் தேதி மீன் பிடிக்க சென்றனர். 21ம் தேதி நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது ஒரு படகு கவிழ்ந்து இரண்டு பேர் இறந்து மிதந்துள்ளனர். உடனடியாக பூம்புகார் மீனவர்கள் இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக மீனவர்களை சிறைபிடித்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,’தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுவது நியாயமற்றது. இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது கடும் கண்டனத்துக்குரியது.
சம்பவத்தன்று, கடலில் கவிழ்ந்த இலங்கை படகை மீட்க அவர்கள் முயற்சித்துள்ளனர். அவர்களுக்கு உதவி அளிக்கும்படி இலங்கை கடற்படையினரை தொடர்பு கொண்டு தெரிவித்த போதிலும் சர்வதேச கடல் எல்லை தாண்டி வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இலங்கை உயர் அதிகாரிகளுடன் பேசி கைது செய்யப்பட்டட 37 மீனவர்களை விடுதலை செய்து, அவர்களுடைய படகுகளை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்துடன் மயிலாடுதுறை எம்பி ஆர். சுதாவின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post இலங்கை கடற்படை கைது செய்துள்ள 37 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ராகுல்காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.