×
Saravana Stores

பிரப்பன்வலசை கடலில் அலைசறுக்கு சாகசப் போட்டி

மண்டபம்,செப்.29: உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை வடக்கு கடலோரப் பகுதியில் தேசிய அளவிலான அலைசறுக்கு சகாச போட்டி நேற்று நடைபெற்றது.உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை வடக்கு கடற்கரையில், தேசிய அளவிலான அலைசறுக்கு சாகச போட்டி நேற்று நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டியை, கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அலை சறுக்கு போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சர்ஜிகான் முன்னிலை வகித்தார்.இப்போட்டியில் கர்நாடகா,கேரளா,புதுச்சேரி,தமிழ்நாடு மகாராஷ்டிரா குஜராத் உள்பட 9 மாநிலங்களில் இருந்து 120 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடலில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக அலை சறுக்கு போட்டியில் 12 கிலோமீட்டர், 200 மீட்டர், 4 கி.மீ டெக்னிக்கல் ரேஸ் போன்ற போட்டிகள் நடைபெற்று வருகிறது, இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு இன்று பரிசளித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

The post பிரப்பன்வலசை கடலில் அலைசறுக்கு சாகசப் போட்டி appeared first on Dinakaran.

Tags : Surfing Adventure Competition ,Prapanwala Sea ,Mandapam ,Prapanwalasai ,Uchipuli ,Prapanwalasai Sea ,Dinakaran ,
× RELATED இமானுவேல் சேகரன் மணிமண்டபத்திற்கு தடை கோரிய வழக்கிற்கு எதிராக மனு