×

மான் வேட்டையாடியவர் கைது

விருத்தாசலம், செப். 28: விருத்தாசலம் அடுத்த மங்களூர், சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் மான்கள் வேட்டையாடப்பட்டு இறைச்சி விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக விருத்தாசலம் வனத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில் வனவர் சிவக்குமார், வனக்காப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன், ஆறுமுகம் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிறுப்பாக்கம் சாலையோரத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் சாமுவேல் (32) என்பதும், நண்பர்கள் இருவருடன் அப்பகுதியில் மான்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி காரில் வைத்துக்கொண்டு பல இடங்களுக்குச் சென்று மான் கறி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவரை விருத்தாசலம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி அவரிடம் இருந்த 3 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் வெடி மருந்துகள், கத்தி, நெற்றியில் கட்டி செல்லும் டார்ச் லைட் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். சாமுவேல் மற்றும் தப்பி ஓடிய அவரது நண்பர்களான கள்ளக்குறிச்சி மாவட்டம், கோட்டக்கரை பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் ரவி(32), சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அஜித் (28) உள்ளிட்ட மூன்று பேர் மீதும் இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆயுத சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சாமுவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ரவி மற்றும் அஜித் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

The post மான் வேட்டையாடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Vritdhachalam Forest Department ,Sirupakkam ,Mangalore ,Vritdhachalam ,Vrudhachalam ,Forest ,Officer ,Raghuvaran ,Dinakaran ,
× RELATED மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது