×

பண மோசடி புகார் தெரிவிக்க பொருளாதார குற்றப்பிரிவு அறிக்கை

 

திருப்பூர், செப்.28: திருப்பூர் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே அக்கரைபாளையத்தில் ஸ்ரீ சிவ செல்வி ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், பொதுமக்களிடம் ஆண்டுக்கு 18 சதவீதம் வட்டி தருவதாக கூறி பணம் வசூல் செய்தது.

கூறியபடி பணத்தை தராமல் ஏமாற்றியதை தொடர்ந்து ஏராளமானோர் திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து உள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குபஙபதிவு செய்து ஒரு சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் புதிதாக புகார் தெரிவிப்பதாக இருந்தால் ஒரு வார காலத்திற்குள் திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பண மோசடி புகார் தெரிவிக்க பொருளாதார குற்றப்பிரிவு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur District Economic Offenses Unit ,Sri Shiva Selvi Auto Finance Company ,Akkaraipalayam ,Vellakovil ,Tirupur District ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!