நாகர்கோவில், செப்.28: ஈடன்ஸ் பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனையில் டிஜிட்டல் இம்ப்ளாண்ட் சிகிச்சை செய்யப்படுகிறது. பல் இம்ப்ளாண்ட் என்பது பல்லை தொலைத்தவர்களுக்கு மீண்டும் பல் வளர்த்தல் போன்ற சிகிச்சை முறையாகும். செயற்கை பல் வேர் போன்று எலும்புக்குள் பொருத்தப்படும் உலோக (டைட்டேனியம்) தாங்கியாகும். இதன்மேல் செயற்கை பல் பொருத்தப்படுகிறது. இயல்பான பல் போலவே இது செயல்படும். ஈடன்ஸ் பல் மருத்துவ மனையில் பல் இம்ப்ளாண்ட் சிகிச்சைக்காக கோன் பீம் கம்யூட்டர் டோமோ கிராபி மற்றும் இன்ட்ராஓரல் ஸ்கேனர் போன்ற நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஸ்கேன் மூலம் பற்கள், எலும்புகள் 3டி வடிவத்தில் பார்க்க முடியும்.
இம்ப்பிளாண்ட் பொருத்த வேண்டிய இடத்தை துல்லியமாக கண்டறிய உதவுகிறது. இன்ட்ரா ஓரல் ஸ்ேகனர் மூலம் சில நிமிடங்களில் பல் மற்றும் வாய்ெமாழி சிக்கல்கைள கண்டறிய முடிகிறது. இந்த நவீன டிஜிட்டல் டென்டிஸ்ட்ரியின் மூலம் துல்லியமான சிகிச்சை, குறைந்த சிகிச்சை நேரம், குறைந்த குறுக்கீடு காரணமாக நோயாளி மிக சிறிது துன்பத்தை மட்டுமே அனுபவிக்கிறார். இயல்பான பல் போலவே இருக்கும். 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட டாக்டர்கள் தினேஷ்குமார், ஸ்டெல்லின் தினேஷ்குமார் இருவரும் பல் இம்ப்ளாண்ட் சிகிச்சையில் திறமையானவர்களாக இருப்பதுடன் தரமான சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
The post டிஜிட்டல் டென்டிஸ்ட்ரி மூலம் பல் இம்ப்ளாண்ட் சிகிச்சை appeared first on Dinakaran.