பெய்ஜிங்: சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, அமெரிக்க வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா தகுதி பெற்றார்.2வது சுற்றில் பிரான்சின் டியேன் பாரியுடன் (22 வயது, 53வது ரேங்க்) மோதிய பெகுலா (30 வயது, 3வது ரேங்க்) 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 33 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்றில் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவாவை வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 46 நிமிடத்துக்கு நீடித்தது.
முன்னணி வீராங்கனைகள் எகடரினா அலெக்சாண்ட்ரோவா, வெரோனிகா குதெர்மதோவா (ரஷ்யா), லெய்லா பெர்னாண்டஸ் (கனடா), கேதரினா சினியகோவா (செக்.), மார்தா கோஸ்ட்யுக் (உக்ரைன்) ஆகியோர் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
The post சீனா ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் பெகுலா appeared first on Dinakaran.