×

கிரிக்கெட்டில் இருந்து பிராவோ ஓய்வு

வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ (40 வயது), அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கரீபியன் பிரிமியர் லீக் தொடருடன் ஓய்வு பெறத் திட்டமிட்டிருந்த அவர், காயம் காரணமாக உடனடியாக விலகியுள்ளார். தனது ஓய்வு முடிவை உருக்கமான கடிதம் மூலமாக அறிவித்துள்ள அவர், ‘எனது மனம் தொடர்ந்து விளையாட விரும்பினாலும், உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. வலிகளையும், அழுத்தங்களையும் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலையில் கனத்த இதயத்துடன் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

டி20 தொடர்களின் பைனலில் அதிக வெற்றிகளைக் குவித்த வீரராக (17) முதலிடம் வகிக்கும் பிராவோ சிபிஎல் தொடரில் மட்டும் 5 கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 40 டெஸ்டில் 2200 ரன் & 86 விக்கெட், 164 ஒருநாளில் 2968 ரன் & 199 விக்கெட், 91 டி20ல் 1255 ரன் & 78 விக்கெட் என சர்வதேச களத்தில் அசத்தியுள்ள அவர்… ஐபிஎல், சிபிஎல் உள்ளிட்ட உள்ளூர் டி20 தொடர்களிலும் ஆல் ரவுண்டராக முத்திரை பதித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி 4 முறை ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டுள்ள பிராவோ, அந்த அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். 2025 சீசனில் அவர் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைகிறார்.

The post கிரிக்கெட்டில் இருந்து பிராவோ ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Bravo ,West ,Indies ,Dwayne Bravo ,Caribbean Premier League series ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்துடன் 2வது ஓடிஐ வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி