×

தொழில்முனைவோர் மின்னணு மூலமாக சந்தைப்படுத்துதல் தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

சென்னை: தொழில்முனைவோர் மின்னணு மூலமாக சந்தைப்படுத்துதல் தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மதுரையில் “தொழில் முனைவோர் -மின்னணு மூலமாக சந்தைப்படுத்துதல்’ தொடர்பான பயிற்சியானது 03.10.2024 முதல் 05.10.2024 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை இந்நிறுவன பயிற்சியானது மங்கையற்கரசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மங்கையற்கரசி நகர், பரவல், மதுரை மாவட்டம் கட்டிட வளாகத்தில் நடைபெற உள்ளது.

மின்னணு மூலமாக – சந்தைப்படுத்துதல் பயிற்சியில் முறையாக சந்தைப்படுத்துதல் தொடர்பான நேரடி பயிற்சி வகுப்பின் மூலமாக கற்றுக் கொடுக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும், இப்பயிற்சி பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.93424 92214/90806 09808/96771 52265முன்பதிவு அவசியம் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொழில்முனைவோர் மின்னணு மூலமாக சந்தைப்படுத்துதல் தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madura ,Government of Tamil Nadu ,Entrepreneurship Development and Innovation Institute ,Dinakaran ,
× RELATED திருச்சியில் கலைஞர் நூலகம்...