*கண்காட்சியில் ஆணையர் பேச்சு
திருமலை : சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் முற்றிலும் குறைக்க வேண்டும் என்று கண்காட்சியை பார்வையிட்ட ஆணையர் பேசினார்.
திருப்பதி கச்சப்பி ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெற்ற வேஸ்ட் டு ஆர்ட், வேஸ்ட் டு வொண்டர் போட்டி மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. இதில் சுமார் 300 மாணவர்கள் பங்கேற்று வீட்டில் உள்ள பயனற்ற பொருட்களால் செய்யப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தனர்.இதனை பார்வையிட்ட பொதுமக்களை மாணவர்கள் செய்த பொருட்கள் பொது மக்களை கவர்ந்தது.
இதனை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் என்.மவுரியா பேசியதாவது: தூய்மை மற்றும் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. வீட்டில் சேரும் கழிவு பொருட்களை குறைக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் குப்பைகளை பிரித்து வீட்டிற்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் கொடுத்தால் மறுசுழற்சி செய்ய முடியும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் முற்றிலும் குறைக்க வேண்டும்.
குழந்தைகள் அதிக கழிவுகளை கொண்டு பயனுள்ள பொருட்களை தயாரித்தது ஆச்சரியமாக உள்ளது என்றார். இதில் கூடுதல் கமிஷனர் சரண் தேஜ் ரெட்டி, துணை கமிஷனர் அமரியா, டி. இ. விஜயகுமார், மகேஷ், சுகாதார அலுவலர் டாக்டர் யுவா அன்வேஷ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் செஞ்சய்யா, சுமதி, மஸ்தான் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர், பொதுமக்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
The post சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் முற்றிலும் குறைக்க வேண்டும் appeared first on Dinakaran.