×

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி சூடு நடத்தி ஏ.டி.எம் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி சூடு நடத்தி ஏ.டி.எம் கொள்ளையர்களை போலீஸ் பிடித்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த கொள்ளையனின் உடல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொள்ளையன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீஸ் துப்பாக்கி முனையில் கைது செய்தது.

 

The post நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி சூடு நடத்தி ஏ.டி.எம் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!! appeared first on Dinakaran.

Tags : Namakkal District ,Kumarapalaya ,A. D. Police ,Namakkal ,Kumarapalayam, Namakkal district ,Kumarapalayam ,
× RELATED நாமகிரிப்பேட்டை அருகே பள்ளிக்கு...