×
Saravana Stores

கரூரில் நடந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் 111 மாணவர்களுக்கு ₹6.52 கோடி கடனுதவி: மாவட்ட கலெக்டர் வழங்கினார்

கரூர், செப். 27: கரூர் என்எஸ்என் பொறியியல் கல்லூரியில் நடந்த கல்விக் கடன் வழங்கும் முகாமில், 111 மாணவர்களுக்கு ரூ.6.52 கோடி மதிப்பில் உயர்கல்வி பயில்வதற்கான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். அப்போது பேசிய அவர் மாணவர்கள் அறிவு வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அதிகளவில் உதவி செய்யும் இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

கரூர் என்எஸ்என் பொறியியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் மாபெரும் கல்விக் கடன் முகாம் நடைபெற்றது. இந்த முகாம் குறித்து கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைகைய உயர்த்திடவும், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் என்ற இரண்டு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

மேலும், பள்ளிப் படிபபை முடித்து உயர்கல்வி செல்வதற்காக கல்லூரி கனவு என்னும் நிகழ்ச்சி முலம் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ புதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1000ம் வழங்கும் திட்டம் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1000ம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மாணவர்களாகிய நீங்கள் உயர்கல்வியை நன்றாக படித்து தகுதியான வேலைகளில் சேர வேண்டும். படிக்கும் காலத்தில் திறமையாக செயல்படக்கூடிய எண்ணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களுடைய கல்லூரி காலத்தை படிப்பிற்கும், வாழ்க்கையின் உயர்வுககும் பயன்படுததிக் கொள்ள வேண்டும்.

கல்விக்காக பொருளாதாரத்தை எந்த பெற்றோரும் சுமையாக கருதக்கூடாது என்பதற்காக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக உயர்கல்வி பயில்வதற்காக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம, கல்வி பயில பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதேயாகும். அந்த வகையில், இந்த கல்விக் கடன் வழங்கும் முகாமில், 111 மாணவர்களுக்கு ரூ.6.52 கோடி மதிப்பில் உயர்கல்வி பயில்வதற்கான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவு வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அதிகளவில் உதவி செய்யும் இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தங்கவேல் பேசினார்.

கல்விக்கடன் வழங்கும் முகாமில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் பானி, தனித்துணை ஆட்சியர் பிரகாசம், முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கரூரில் நடந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் 111 மாணவர்களுக்கு ₹6.52 கோடி கடனுதவி: மாவட்ட கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Karur ,District Collector ,Thangavel ,NSN Engineering College ,Dinakaran ,
× RELATED தனியார் வேலைவாய்ப்பு முகாம்; கரூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர் கூட்டம்