- முதல் அமைச்சர்
- முடிகணிகை மண்டபம்
- தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில்
- கரூர்
- தமிழ்
- தமிழ்நாடு
- இந்து அறக்கட்டளை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- செயலகம்
- தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில்
கரூர், நவ. 14: தமிழ்நாடு முதல்வர், இந்து அறநிலையத்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் முடி காணிக்கை மண்டபத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்வர், சென்னை தலைமை செயலகத்தில், இந்த சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.2.09 கோடி மதிப்பில் கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் முடிகாணிக்கை மண்டபத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தங்கவேல் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் கவிதா முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில், துணை மேயர் சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, டிஎஸ்பி செல்வராஜ், அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
The post தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் முடிகாணிக்கை மண்டபத்தை காணொலி மூலம் முதல்வர் திறந்துவைத்தார் appeared first on Dinakaran.