புனே: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரூ.130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை, புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு பயன்பாடுகளுக்காக அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர், ‘‘இந்த 3 சூப்பர் கம்ப்யூட்டர்களும் இயற்பியல் முதல் புவி அறிவியல் வரை மற்றும் அண்டவியல் ஆய்வுகளை மிக விரிவாக மேற்கொள்ள உதவும். இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகம் எதிர்கால உலகு பற்றி இதில்தான் கவனம் செலுத்துகின்றன. தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் திறனை நேரடியாகச் சார்ந்திராத எந்த துறையுமே இன்று இல்லை எனலாம்.
இது தொழில்துறை 4.0-ல் இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய அடிப்படையாக அமைந்துள்ளது’’ என்றார். இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள், தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் திட்டத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த மூன்றும் புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் அறிவியல் ஆய்வுக்காக வைக்கப்படும். இதுபோல், ரூ.850 கோடி மதிப்பில், தட்டவெப்பம், சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்ட உயர் திறன் கம்ப்யூட்டர்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
The post இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 3 சூப்பர் கம்ப்யூட்டர்களை அர்ப்பணித்தார் மோடி appeared first on Dinakaran.