இந்த டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் அஸ்வின் ஒரு விக்கெட் எடுத்தால் 2வது இன்னிங்சில் 100 விக்கெட் அள்ளிய முதல் வீரர் என்ற பெருமை அஸ்வினுக்கு கிடைக்கும். இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ள அனில் கும்ப்ளே 94(35டெஸ்ட்), பிஷன் சிங் பேடி 60(23டெஸ்ட்), இஷாந்த் சர்மா(36டெஸ்ட்), ரவீந்திர ஜடேஜா(30டெஸ்ட்) ஆகியோர் தலா 54 விக்கெட் சாய்த்துளளனர். இப்போது 99(35டெஸ்ட்) விக்கெட்களுடன் உலக அளவில் அஸ்வின் 6வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 138(53டெஸ்ட், நாதன் லயன் 119(57டெஸ்ட்) விக்கெட் எடுத்து முதல் 2 இடங்களில் உள்ளனர்.
* சதமடிப்பாரா கோஹ்லி
இந்த ஆண்டு நடந்த டெஸ்ட் ஆட்டங்களில் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித், சுப்மன், ஜெய்ஸ்வால்(தலா 2) ஜடேஜா, அஸ்வின், ரிஷப் ஆகியோர் மட்டுமே உள்ளனர். கோஹ்லி, ராகுல் இந்தப் பட்டியலில் இன்னும் இணையவில்லை. அதுமட்டுமல்ல ஒருநாள், டி20 என எந்த வகையான போட்டிகளிலும் கோஹ்லி இந்த ஆண்டு சதம் விளாசவில்லை. டெஸ்ட் ஆட்டத்தில் கடைசியாக 2023ம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம்(121ரன்) விளாசினார். இந்த டெஸ்ட்டில் மீண்டும் சதம் விளாசக் கூடும்.
The post காத்திருக்கும் அஸ்வின் appeared first on Dinakaran.