விளையாட்டில் இருந்த அரசியலை சமாளிக்க முடியாமல் ‘ஒலிம்பிக்’ போட்டியுடன் விலகினார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ‘அதிகாரம் அவசியம்’ என்று அடுத்து அரசியல்வாதியும் ஆகி விட்டார். கூடவே நடைபெறும் அரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களம் காணுகிறார். அவர் செப்.6ம் தேதி காங்கிரசில் இணைந்தார்.
அரியானாவின் கார்கோடாவில் உள்ள வினேஷ் வீட்டுக்கு செப்.9ம் தேதி தேசிய ஊக்க மருந்து தடுப்பு கண்காணிப்புக் குழு(நாடா) சென்றுள்ளது. வினேஷின் சிறுநீர், ரத்த மாதிரியை சேகரிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வினேஷ் வீட்டில் இல்லாததால் 14நாட்களுக்குள் விளக்கம் கேட்டு நாடா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வினேஷ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் ‘நாடா’ நடவடிக்கைகள் இப்போது விமர்சனங்களயும், மீண்டும் கேள்விகளையும் எழுப்பி உள்ளன.
The post வினேஷை விடாது பிரச்னை appeared first on Dinakaran.