பெங்களூரு: கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று உல்பா-ஐ அமைப்பு, அசாம் மாநிலத்தில் 20 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்திருந்தது. இதையடுத்து பல இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட் டன.
இந்த வழக்கை அசாம் மாநில போலீசும் என்.ஐ.ஏ அமைப்பும் சேர்ந்து விசாரித்துவரும் நிலையில், செப்டம்பர் 21ம் தேதி இந்த வழக்கில் 15 பேரை அசாம் போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் செக்யூரிட்டி பணியில் இருந்த அசாமை சேர்ந்த கிரிஷ் போராவிற்கு கவுகாத்தியில் குண்டு வைத்த சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் பெங்களூருவில் கிரிஷ் போராவை கைது செய்தனர்.
The post அசாமில் குண்டு வைத்தவர் பெங்களூருவில் கைது: என்.ஐ.ஏ அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.