- மதுரை
- ஆரப்பாளையம் ரவுண்டானா
- வைகை தென்கரை சாலை
- காமராஜர் பாலம்
- திண்டுக்கல் சாலை
- வடகரை ரோடு
- தத்தனேரி
- தின மலர்
மதுரை, செப். 27: மதுரை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு பணிகள் நடக்கின்றன. இதற்கிடையே வைகை தென்கரை சாலையில் ஆரப்பாளையம் ரவுண்டானாவிலிருந்து திண்டுக்கல் சாலையில் உள்ள காமராஜர் பாலம் செல்ல திரும்பும் இடம், வடகரை சாலையிலிருந்து தத்தனேரி பாலம் ஏறும் இடம், அருள்தாஸ்புரம் பாலம், வைகை வடகரை சாலையிலிருந்து திண்டுக்கல் சாலையை இணைப்பதற்காக செல்லும் சாலை,
மதுரை – ராமேஸ்வரம் சாலையில் எச்எம்எஸ் காலனி துவங்கி அச்சம்பத்து ரிங்ரோடு சந்திப்பு வரையிலான பகுதி, கோச்சடை – துவரிமான் சாலையில் நீரேற்று நிலையம் துவங்கி துவரிமான் சாலைக்கரை முத்தையா கோயில் சந்திப்பு வரை உள்ள பகுதி என, பல இடங்களில் சாலையோரம் மணல் தேங்கி கிடக்கிறது. அவ்வப்போது வீசும் காற்றால் பறக்கும் மணல், வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கி வருகிறது. எனவே, இப்பகுதிகளில் உள்ள மணலை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
The post சாலைகளில் தேங்கும் மணல் அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.