மல்லசமுத்திரம், செப்.27: மல்லசமுத்திரம் பஸ் நிலையம், சேலம்- திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில், தினமும் 5 நிமிடத்திற்கு ஒருமுறை அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. ஒருசில பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல், சாலையிலேயே நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றன. இதனால், பஸ் நிலையத்திற்குள் நிற்பதா, வெளியே நிற்பதா என தெரியாமல் மக்கள் தவித்து வந்தனர். இதுகுறித்து பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று பஸ் நிலையத்திற்குள் செல்லாத பஸ்களை, மல்லசமுத்திரம் போலீஸ் எஸ்ஐ முருகேசன் தலைமையில் போலீசார் வழிமறைத்து அபராதம் விதித்து, பஸ் நிலையத்திற்குள் சென்றுவர வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் சாலையோரங்களின் வெளியே பேரிகார்டுகளை வைத்தனர்.
The post பஸ் நிலையத்திற்குள் வராத பஸ்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.