×
Saravana Stores

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற “நான் முதல்வன்” உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் “நான் முதல்வன்” உயர்வுக்கு படி நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று ,முன் தினம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற நிகழ்வு சென்ற மே மாதம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற 1,300 அதிகமான மாணவர்கள் உயர்கல்வி வழிகாட்டி ஆளுமைகள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்கள் பல்வேறு தொழில் படிப்புகள், மருத்துவ படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் நேரடி சேர்க்கை நிகழ்வுகள் நடைபெற்றன.

2022-23 மற்றும் 2023-24ம் கல்வியாண்டில், 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேராத மாணவர்களுக்கும், 10 மற்றும் 11ம் வகுப்புகள் மற்றும் கல்லூரி இடைநின்ற மாணவ – மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஏதுவாக “உயர்வுக்கு படி” என்ற வழிகாட்டுதல் நிகழ்வு நடத்தப்பட உள்ளது. இதில், மேற்கண்ட மாணவர்கள் ஐடிஐ பாலிடெக்னிக் பொறியியல் கலை மற்றும் அறிவியல் படிப்புகள், திறன் பயிற்சிகள் போன்ற ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து உயர்கல்வி படிக்க வழிவகை செய்யும் வகையில், கல்வி கடன் வசதிகள் பல்வேறு துறைகளால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் தற்போது உள்ள காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆளுமைகள் மூலம் வழிகாட்டுதல் உட்பட அரசின் பல்வேறு உயர்கல்வி வழிகாட்டும் நலத்திட்டங்கள் தொடர்பான அரங்குகள் அமைத்து வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

மேலும், தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் “நான் முதல்வன்’’ திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற நிகழ்வு முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு, தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் மூலம் உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான தகவல்களை பெற்றனர். மேலும், உயர் படிப்புக்கு தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மேவலூர்குப்பம் ஊராட்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அரசு மற்றும் கல்வி நிறுவனத்தின் சார்பில் மாணவ – மாணவிகளுக்காக உயர் கல்வி வழிகாட்டுதல் தொடர்பான பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு, உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் நடைபெறும் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாணவ – மாணவிகள் தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் மூலம் உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு, அனைத்து மாணவர்களும் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, அரசு அலுவலர்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Skill Development Corporation ,Kanchipuram ,Nan Muluvan ,Kanchipuram District Collector's Office Campus People's Relations Center Forum ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024-25ஆம்...