தேவையானவை:
காரல் மீன்- அரை கிலோ,
தேங்காய்- அரை முடி,
பச்சை மிளகாய்- 3,
சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள்- தலா ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சை பழம்- 1,
சின்ன வெங்காயம்- 5,
கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை:
தேங்காயை துருவி இரண்டு முறை பால் எடுக்கவும். இரண்டாவது முறையாக எடுத்த தேங்காய் பாலுடன், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், சுத்தம் செய்த காரல் மீனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.நன்றாக கொதித்து வந்ததும் முதலில் எடுத்த தேங்காய் பாலை, சேர்த்து இறக்கவும். எலுமிச்சை பழத்தை ருசிக்கு ஏற்றவாறு பிழிந்து விடவும். பின்னர் வானலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, வெங்காயம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு தாளித்து சொதியில் ஊற்றினால் சூப்பரான சுவையான காரல் மீன் சொதி தயார்!
The post காரல் மீன் சொதி ரெசிபி appeared first on Dinakaran.