தேவையான பொருட்கள்:
பலாப்பழம் – 10 துண்டுகள்
ரவை – 1 கப்
கோதுமை மாவு – 1 கப்
சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
ஆப்ப சோடா – 1 சிட்டிகை
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பலாப்பழ துண்டுகளில் உள்ள விதைகளை நீக்கிவிட வேண்டும்.பின்னர் அந்த பலாப்பழ துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌலில் அரைத்த பலாப்பழ விழுதை எடுத்து, அத்துடன் ரவை மற்றும் கோதுமை மாவை சேர்க்க வேண்டும்.அதன் பின் அதில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். றகு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.10 நிமிடம் கழித்து, தயாரித்து வைத்துள்ள மாவை நன்கு கிளறி, ஆப்ப சோடாவை சேர்த்து மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ கிளறாமல், ஓளரவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.இறுதியாக ஒரு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் எண்ணெய் ஊற்றி, பின் கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி மூடி வைத்து 5-6 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.5 நிமிடம் கழித்து பணியாரத்தை திருப்பி போட்டு, 2 நிமிடம் மீண்டும் வேக வைத்து எடுத்தால், சுவையான பலாப்பழ பணியாரம் தயார்.
The post பலாப்பழ பணியாரம் appeared first on Dinakaran.