×
Saravana Stores

ராகி ஸ்மூத்தி

தேவையானவை:

ராகி மாவு – 1 1/2 டேபிள் ஸ்பூன்,
பட்டை – 1,
பாதாம் பருப்பு – 8,
ஆப்பிள் – 1,
சியா விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்,
ஆளி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்,
பேரீச்சம்பழம் – 2.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ராகி மாவை போட்டு கட்டிகள் இல்லாமல் கால் கப் தண்ணீரில் நன்றாகக் கலக்கவும். முளைக்கட்டிய ராகி மாவு என்றால் சத்துக்கள் இன்னும் கூடுதலாக இருக்கக்கூடும். வாணலியை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி ராகி கலவை, பட்டை சேர்த்து அடுப்பை குறைவான தணலில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். ஒரு சில நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து ராகி கலவையை ஆற விடவும்.ஒரு மிக்சியில் ராகி கலவையுடன், முதல் நாள் இரவு ஊற வைத்த பாதாம், ஆப்பிள், ஆளி விதைகள், சியா விதைகள், பேரீச்சம்பழத்தை கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். இப்போது சுவையான, ஹெல்த்தியான ராகி ஸ்மூத்தி ரெடி.

The post ராகி ஸ்மூத்தி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உன்னத உறவுகள்