×

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெற அமராவதி அணையிலிருந்து நீர் திறந்து விட அரசு ஆணை..!!

கரூர்: திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெற அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளுக்கு, அமராவதி ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 700 கனஅடி வீதம் 4233.60 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டம், அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக வினாடிக்கு 440 கன அடி வீதம் 2661.12 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 27.09.2024 முதல் 09.02.2025 வரை 135 நாட்களில் 70 நாட்கள் தண்ணீர் திறப்பு 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில், மொத்தம் 6894.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெற அமராவதி அணையிலிருந்து நீர் திறந்து விட அரசு ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Amaravati Dam ,Tirupur ,Karur ,Amaravati ,Karur district ,Alangiyam ,
× RELATED அமராவதி அணை நீர்மட்டம் 87.60 அடியாக உயர்வு