×

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் வரலாற்று சாதனை

துபாய்: சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் 10 இடங்கள் முன்னேறி 8ம் இடத்தை பிடித்துள்ளார்.

ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் வீரர் வருவது இதுவே முதல் முறை. அதேபோல் இங்கிலாந்து தொடரில் கலக்கி வரும் டிரெவிஸ் ஹெட் 7 இடங்கள் முன்னேறி 9வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். முதல் இடத்தில் பாபர் அசாம் நீடிக்கிறார்.

இதேபோல் ஒருநாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ரஷித் கான் 4வது இடத்துக்கும், மேக்ஸ்வெல் 5வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர். முதல் இடத்தில் முகமது நபி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் கேசவ் மஹாராஜ் முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் பும்ரா 8வது இடத்திலும், முகமது சிராஜ் 10வது இடத்திலும் உள்ளனர்.

The post ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் வரலாற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : ICC ,Dubai ,Afghanistan ,ODI ,South Africa ,Dinakaran ,
× RELATED ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான...