×

அவதூறு வழக்கு: உத்தவ் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவு

மும்பை: அவதூறு வழக்கில் உத்தவ் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு மும்பை நீதிமன்றம் 15 நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மும்பை அருகே மீரா பயாந்தர் மாநகராட்சியில் கழிப்பறை கட்டி, பராமரிக்கும் திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல் என்று சஞ்சய் புகார் அளித்திருந்தார். ரூ.100 கோடி ஊழலில் கிரிட் சோமையா, அவரது மனைவிக்கும் பங்கு உள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார்.

இதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் அவதூறாக குற்றம்சாட்டி உள்ளதாக கூறி சோமையா மனைவி மேதா மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த மசகான் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதித்தது.
பா.ஜ.க.வைச் சேர்ந்த கிரிட் சோமையாவின் மனைவி மேதா தொடர்ந்த அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post அவதூறு வழக்கு: உத்தவ் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Uthav Sivasena M. B. ,Mumbai ,court ,Sanjay Rawat ,Uddhav Sivasena ,M. ,Sanjay ,Mira Biander Municipality ,Uthav Sivasena ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிவு..!!