×

தெலங்கானாவில் பயங்கரம் சிஆர்பிஎப் முகாமில் துப்பாக்கியால் சுட்டு துணை ஆய்வாளர் கொலை: தலைமை காவலர் தற்கொலை முயற்சி

திருமலை: தெலங்கானாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) துணை ஆய்வாளரை தலைமைக் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த முலுகு மாவட்ட எஸ்பிசங்ராம் சிங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 285 கி.மீ. தொலைவில் முலுகு மாவட்டம் வெங்கடாபுரத்தில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது.  இந்த முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட பிரச்னையின்போது அப்படைப் பிரிவின் தலைமைக் காவலர் ஸ்டீபன் தனது துப்பாக்கியால் துணை ஆய்வாளர் உமேஷ் சந்திராவை சுட்டுள்ளார். இதில் குண்டு பாய்ந்ததில் துணை ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தலைமைக் காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், எதற்காக அவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சிஆர்பிஎப் துணை ஆய்வாளர் சக பணியாளரால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post தெலங்கானாவில் பயங்கரம் சிஆர்பிஎப் முகாமில் துப்பாக்கியால் சுட்டு துணை ஆய்வாளர் கொலை: தலைமை காவலர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : inspector ,Bangaram CRPF ,Telangana ,Tirumala ,Central Reserve Police Force ,CRPF ,
× RELATED அணைக்கட்டு அருகே 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு