×
Saravana Stores

தூத்துக்குடி கேவிகே நகர் பகுதியில் பக்கிள் ஓடையில் மணல், கழிவுகள் அகற்றும் பணி

தூத்துக்குடி, செப். 26: தூத்துக்குடி கேவிகே நகர் பகுதியில் செல்லும் பக்கிள் ஓடையில் மணல் திட்டுகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகராட்சியில் பிரதான கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகாலாக பக்கிள் ஓடை இருந்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து நீர்வழித்தடங்களையும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி கேவிகே நகர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் 2வது வழித்தடம் அமைக்கப்பட்ட போது, பக்கிள் ஓடையில் உள்ள பாலத்தின் அடியில் மண், கற்கள் அடைபட்டு சின்னக்கண்ணுபுரத்தில் இருந்து வழிந்தோடும் மழைநீர் சரியாக வடியாத நிலை இருந்து வந்தது. இதையடுத்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முயற்சியால் இப்பகுதியில் செல்லும் பக்கிள் ஓடையில் உள்ள மணல் திட்டுகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் சிவக்குமார் (எ) செல்வின் மற்றும் மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி கேவிகே நகர் பகுதியில் பக்கிள் ஓடையில் மணல், கழிவுகள் அகற்றும் பணி appeared first on Dinakaran.

Tags : Buckle stream ,Thoothukudi ,KVK Nagar ,Minister ,Geethajeevan ,Thoothukudi Corporation ,
× RELATED தொழிலாளி வீட்டில் பைக்குகளுக்கு தீ வைப்பு