புதுடெல்லி: மேக் இன் இந்தியா திட்டம் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்று, இந்திய ஆயுதப் படைகள் ஆயுதங்கள் மற்றும் தளங்களைப் பயன்படுத்துகின்றன. அவை நமது சொந்த மண்ணில் தயாரிக்கப்படுகின்றன. 2023-24ம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் உற்பத்தி மதிப்பு ரூ. 1.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது 90க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மோடி தலைமையிலான அரசு, ஒவ்வொரு களத்திலும் நாட்டை தன்னிறைவு பெறுவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளில், உள்நாட்டு பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்கு அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2023-24ல் முதல் முறையாக ரூ. 21,000 கோடியைத் தாண்டியது. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதை ரூ..50,000 கோடியாக உயர்த்த பாதுகாப்பு அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
The post ஆயுதங்கள் விற்பனை ரூ..1.27 லட்சம் கோடி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தகவல் appeared first on Dinakaran.