- ஜெகன்
- திருப்பதி
- சந்திரபாபு நாயுடு
- YSR காங்கிரஸ்
- திருமலா
- ஒய்.எஸ்.ஆர்
- ஆந்திரப் பிரதேசம்
- முதல் அமைச்சர்
- சந்திரபாபு
- காங்கிரஸ் கட்சி
- Lattu
- சுவாமி
திருமலை: ஆந்திர மாநிலம் முழுவதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு பொய் கூறியதாகவும், இதனால் சுவாமியின் மகிமை, லட்டு புனித தன்மை கேட்டுள்ளது. எனவே மாநிலம் முழுவதும் கோயில்களில் பூஜை செய்ய அனைவரும் வரும்படி அக்கட்சி தலைவர் ஜெகன்மோகன் அழைப்பு விடுத்துள்ளார் 28ம் தேதி திருப்பதியில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று சந்திரபாபு நாயுடு செய்த பாவத்துக்கு ஏழுமலையானிடம் ஜெகன்மோகன் மன்னிப்பு கேட்க உள்ளார் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சமூக வலைதளத்தில் ஜெகன் மோகன் செய்த இந்த பதிவுக்கு ரீ டிவிட் செய்து,‘ உங்கள் குடும்பம் சிலைகளை வணங்குவதில்லை. திருமலையில் வேற்று மதத்தவரை தலைவராக நியமித்தீர்கள். சுவாமி சிலையை கருங்கல்லுடன் ஒப்பிட்டும் கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது. இறுதியாக கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திய பிறகு, லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டது. சுவாமி உங்களைப் போன்ற நம்பிக்கையும் பக்தியும் பயமும் இல்லாத ஒரு நபரா, இந்த அழைப்பைக் கொடுக்கிறார்கள்? உங்களைப் போன்றவர்களை எப்படி தண்டிக்க வேண்டும் என்பது சுவாமிக்கு தெரியும் அதையும் சுவாமி பார்த்துக்கொள்வார் என பதிவு செய்துள்ளனர்.
The post சந்திரபாபு நாயுடு செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு திருப்பதியில் ஜெகன் வழிபாடு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.