- மோடி
- மணிப்பூர்
- திரிணாமூல் காங்கிரஸ்
- புது தில்லி
- எங்களுக்கு
- திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா
- டெரிக்
- பிரையன்
- வௌிநாடு
- வௌிநாடு
- தின மலர்
புதுடெல்லி: 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாடு திரும்பினார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக். ஓ. பிரையன் மோடியின் வௌிநாடு பயணம் பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். டெரிக். ஓ. பிரையன் தன் எக்ஸ் பதிவில், “கடந்த ஆண்டு மே 3ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அங்கு இன்னும் அவ்வப்போது இனக்கலவரம் நடந்து வருகிறது. கடல்பறவையான ஆர்க்டிக் டெர்ன் இனத்தை சேர்ந்த பிரதமர் மோடி அமெரிக்கா உள்ளிட்ட வௌிநாடுகளுக்கு சென்று வருகிறார். ஆனால் ஓராண்டை கடந்தும் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு செல்ல மோடிக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லையா?” என்று கேள்வியெழுப்பி உள்ளார். மேலும் டெரிக். ஓ.பிரையன், “மக்களவை துணைதலைவரை எதிர்க்கட்சியில் இருந்து நியமிக்க வேண்டுமென எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு செவி சாய்க்காமல், 17வது மக்களவை கூட்டத்தொடர் முழுவதையும் மக்களவை துணைதலைவரின்றி நடத்தி முடித்துள்ளார். நாடாளுமன்ற குழுக்களும் இன்னும் அமைக்கப்படவில்லை” என அடுக்கடுக்காக குற்றம்சாட்டி உள்ளார்.
The post வௌிநாடுகளுக்கு போகும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா? திரிணாமுல் காங்கிரஸ் தாக்கு appeared first on Dinakaran.