×

வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வந்தால் இந்தியா கூட்டணி எதிர்க்கும்: ராகுல் காந்தி அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது: பாஜ கட்சியினர், திட்டங்கள் குறித்து மக்களை சோதிக்கிறார்கள். யாரிடமாவது ஒரு யோசனையை மக்கள் மத்தியில் பரப்பச் சொல்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் எதிர்வினையைப் பார்க்கிறார்கள். இப்போது, வேளாண் சட்டங்கள் குறித்து பாஜ பெண் எம்பி கங்கனா கூறிய விஷமத்தனமான கருத்துக்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவேளை அந்த கருத்துகளை அவர் ஏற்காவிடில் கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும்.

வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வந்தால் இந்தியா கூட்டணி அதை எதிர்த்து நிற்கும். 700 விவசாயிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களின் மரணம் நினைவு கூரப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும். அவர்களின் நினைவாக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்துவதற்கு கூட மோடி அனுமதிக்கவில்லை. இதை நாங்கள் மறக்க மாட்டோம். பாஜ கட்சியின் கொள்கையை யார் முடிவெடுக்கிறார்கள். ஒரு எம்பியா அல்லது பிரதமர் மோடியா? விவசாயிகளுக்கு எதிரான சதி திட்டங்கள் வெற்றியடைவதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது. விவசாயிகளை பாதிக்கும் வகையில் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தால் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வந்தால் இந்தியா கூட்டணி எதிர்க்கும்: ராகுல் காந்தி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,BJP ,Dinakaran ,
× RELATED அமெரிக்க விபத்தில் காயமடைந்த அரியானா...