- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பள்ளி கல்வித் துறை
- சென்னை
- கல்வித் துறை
- பள்ளி கல்வித் துறை
- தமிழ்
- தமிழ்நாடு
- ஆசிரியர்கள் சங்கம்
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலேயே கல்வியாண்டு நாட்காட்டி வெளியிடப்படும். வழக்கமாக 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் வேலைநாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அண்மையில் அதனை 210 ஆக குறைத்து திருத்தப்பட்ட நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது.
பள்ளிக்கல்வித்துறை நாட்காட்டியின்படி, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 11, 12 பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கடந்த புதன் கிழமை(செப் 18) முதல் தொடங்கிய நிலையில், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.20 தொடங்கியது. செப்டம்பர் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து செப். 28 முதல்அக். 2 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட உள்ளது.
மீண்டும் அக்டோபர் 3ம்தேதி ( வியாழக்கிழமை) பள்ளிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 5 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு அதனை பரிசீலித்து தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 6ம் தேதி வரை) விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், அக்டோபர் 7ம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
The post ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பள்ளிகளுக்கு அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறையை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.