×
Saravana Stores

ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு

தெலுங்கானா: ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், பிரசாதங்களை ஆய்வு செய்ய உள்ளது. திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவின் திருப்பதி என்று அழைக்கப்படும் யதாத்ரி கோயில் லட்டு பிரசாதத்திலும் கலப்படம் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யை கோயில் நிர்வாகம் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

The post ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Andhra Pradesh ,Telangana ,EU government ,Food Safety and Quality Assurance Commission of India ,Tirupathi Temple ,Andhra ,
× RELATED திருவாரூர் அருகே மத்திய பல்கலைக்கழக விடுதி உணவில் புழு, பூச்சிகள்