கந்தர்வகோட்டை,செப்.25: கந்தர்வகோட்டையில் மணல் லாரிகள் தார்பாயால் மூடி செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வழியாக புதுக்கோட்டை, திருமயம், சுற்றுபுற பகுதிகளில் இருந்து வீடு, கட்டிடங்கள் கட்டுமான பணிக்கு பி-சாண்ட், எம்-சாண்ட் மற்றும் சேலம், கரூர், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் இருந்து செங்கல் கற்கள் பெரும் அளவிலும், அரனை கல்கள், கடைகால் கற்கள், முக்கால் ஜல்லிகள், செம்மண் திராவல் லாரிகளிலும், டிப்பர்களிலும், டரஸ்களிலும் அதிக பாரத்துடன் இப்பகுதியில் செல்கிறது.
இதனால் சாலை மேடு பக்கம் உருவாகிறது. சாலையில் வாகனங்களில் இருந்து சிதறி விழும் கல் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் வாகனங்களில் தார்பாய் மூடாமல் எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லி ஏற்றி செல்வதால் தூசிகள் பறந்து வாகனத்தில் செல்வதற்கு மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வரும் காலங்களில் வாகனங்களில் தார்பாய் போட்டு மூடி செல்வதை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கந்தர்வகோட்டை மணல் லாரிகள் தார்பாயால் மூடி செல்ல வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.