×
Saravana Stores

கஞ்சா விற்ற இருவர் கைது

ஈரோடு, செப்.25: அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட அய்யனாரப்பன் கோவில் 2வது வீதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவர் அதே வீதியைச் சேர்ந்த பழனிசாமி (20) என்பது தெரியவந்தது. மேலும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.500 மதிப்பிலான 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.  இதேபோல, கோபி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட புதுப்பாளையம், மணிமேகலை வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில் அவர், புதுப்பாளையம், குப்பாண்டார் வீதியைச் சேர்ந்த பழனிகுமார் (47) என்பதும், சமையல் தொழிலாளியான அவர், வேலைக்காக திருப்பூர் சென்ற போது அங்கிருந்த ஒரு நபரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.500 மதிப்பிலான 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Town ,Ayyanarapan temple ,
× RELATED அரசு அலுவலக சுவர்களில் விளம்பர போஸ்டர்கள் அகற்றம்