×

இன்று குடிநீர் நிறுத்தம்

சேலம், செப்.25: சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் சாரதா கல்லூரி அருகில், பிரதான குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. அந்து பழுதினை சரி செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் சேலம் மாநகராட்சி மூலம் நடைபெறுகிறது. இதனால் அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 4,5,6,7,8,12,13,14,15,16,24,25,26,29,30 மற்றும் 31 ஆகிய வார்டுகளில் குடிநீர் இன்று(25ம் தேதி) நிறுத்தம் செய்யப்படுகிறது. இதேபோல் அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 9,10,11,33,34,35,38,38 மற்றும் 40 ஆகிய வார்டுகளிலும் இன்று குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்குமார் தெரிவித்துள்ளார்.

The post இன்று குடிநீர் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Municipal Corporation ,Astampatty ,Mandal ,Saratha College ,Andhu Paludin ,Salem Corporation ,Dinakaran ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி