- பூந்தமல்லி
- பூந்தமல்லி அரிஜர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை
- பூந்தமல்லி திமுக நகர்
பூந்தமல்லி: தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்கீழ் பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,472 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் ஜி.ஆர்.திருமலை, நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், நகர்மன்ற உறுப்பினர் தீபா யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 1,472 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதில் பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 400, பூந்தமல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 407, சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளிக்கு 348, கோலப்பன்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 20, சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 129, கீழ்மனம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 168 என மொத்தம் 1,472 விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, ஒன்றிய செயலாளர் கமலேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செங்குட்டுவன், நகர திமுக நிர்வாகிகள் தாஜூதீன், துரை பாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டெல்லி ராணி மலர்மண்ணன், அசோக்குமார், லயன் சுதாகர், புண்ணியகோட்டி, வின்பிரட், நெல்சன், அன்பழகன், சௌந்தரராஜன், யுவராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள் லட்சுமி, தென்னஷி, திருவள்ளுவன், ஜானகி அமுதா, விஜயலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் சின்னதுரை, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருவேற்காடு எஸ்.கே.டி.ஜெ.அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 210 பேருக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி, நகர்மன்ற துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், பள்ளி செயலர் சத்தியநாராயணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியை மாணிக்கவள்ளி வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 210 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் ரமேஷ், திமுக நிர்வாகிகள் உமாபதி, ஏ.ஜே.பவுல், சங்கர், பரிசமுத்து, சத்யகிரி, ஜானகி சுடலைமணி, பள்ளி நிர்வாகிகள் முரளிக்குமார், டில்லி, மோகன்ராம், சதீஷ்குமார், சங்கரநாராயணன், கோவிந்தசாமி, அருள்குமார், ஜெகதீஷ், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டை : பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பெரியபாளையம் மற்றும் கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ – மாணவிகளுக்கு, திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர்கள் சம்பத், பேரின்ப செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் சத்தியவேலு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, குணசேகரன், வக்கீல்கள் சீனிவாசன், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏழுமலை, பொருளாளர் வெங்கடாசலம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜான்சிராணி ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு 225 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், ரவிக்குமார், ரவிச்சந்திரன், தனசேகர், ஏனம்பாக்கம் சம்பத், முகம்மது மொய்தீன், சந்திரசேகர், பாபு, ராஜா, ராஜா, நீதி செல்வகுமார், சுரேஷ், பாஸ்கர், தணிகாசலம், தினேஷ், அப்புன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பொன்னேரி : பொன்னேரி நகராட்சியில் அடங்கிய அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.லட்சுமிகலா தலைமை வகித்தார். பொன்னேரி நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், மகளிரணி தலைவர் உமா காத்தவராயன், மாவட்ட கல்வி அலுவலர் கஸ்தூரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்துகொண்டு 206 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ், ஜெயந்தி ஷில்பா, ஆசிரியர்கள், எஸ்.எம்.சி உறுப்பினர்கள், திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ஆவடி : ஆவடியில் அரசு உதவி பெறும் இம்மாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசின் 629 விலையில்லா சைக்கிள்களை சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், மண்டல தலைவர் ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், பள்ளி தலைமை ஆசிரியர் மெர்சி பாத்திமா, நடுகுத்தகை ரமேஷ், மாநகர பொறுப்பாளர் சண் பிரகாஷ், பகுதிச் செயலாளர்கள் நாராயண பிரசாத், வழக்கறிஞர் வினோத் குமார், ஜெயந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: எம்எல்ஏக்கள் வழங்கினர் appeared first on Dinakaran.