×

உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது கல்வீச்சு

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை மஹபோதி எக்ஸ்பிரஸ் ரயில் மிர்சாபூர் ரயில்நிலையத்தை நெருங்கும் நிலையில் ரயில் மீது மர்மநபர்கள் கல்வீசியுள்ளனர். இதேபோல் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் டெல்லியில் இருந்து வந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீசப்பட்டுள்ளது. இதில் பயணி ஒருவர் காயமடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது கல்வீச்சு appeared first on Dinakaran.

Tags : Prayagraj ,Mahabodhi Express ,Mirzapur railway station ,Uttar Pradesh ,Seemanchal Express ,Delhi ,Prayagraj district ,UP ,
× RELATED கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில்...