×

பக்கத்து வீட்டுக்காரருடன் காம்பவுண்ட் சுவர் பிரச்னை; நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் உத்தரவு


சென்னை: மதில்சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. சென்னை செனடாப் ரோடு இரண்டாவது தெருவில் நடிகை திரிஷாவின் வீடு உள்ளது. இந்த நிலையில் தனது வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில், பொதுவான மதில் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பன் திட்டமிட்டுள்ளார். எனவே, மதில் சுவரை இடிக்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் எனக்கோரி நடிகை திரிஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி டீக்காரமன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை திரிஷா தரப்பிலும், எதிர் தரப்பிலும் பிரச்னை இரு தரப்பிலும் சமரசமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி, நடித்த திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post பக்கத்து வீட்டுக்காரருடன் காம்பவுண்ட் சுவர் பிரச்னை; நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Trisha ,Chennai ,Chennai High Court ,second street ,Senadop Road, Chennai ,
× RELATED எனது மகன் இறந்துவிட்டான் இனி எப்படி நடிப்பேன்? திரிஷா கண்ணீர்