- ராம
- காஞ்சிபுரம்
- காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர்
- வித்வான் மகாதேவன்
- ஏனாத்தூர் சங்கரா செவிலியர் கல்லூரி
- காஞ்சி காமகோடி டீன்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வித்வான் மகாதேவன் எழுதிய `ராமர் நடந்த பாதையில்’என்னும் ஆய்வு நூலை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் வெளியிட்டார். காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் சங்கரா நர்சிங் கல்லூரி வளாகத்தில் நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தலைமை தாங்கி, வித்வான் மகாதேவன் எழுதிய `ராமர் நடந்த பாதையில்’ என்னும் ஆய்வு நூலை வெளியிட, ஸ்ரீ சங்கரா கல்லூரி முதல்வர் ராம.வெங்கடேசன், வைஷ்ணவா கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூலில் நூலாசிரியர் ராமர் அயோத்தி முதல் இலங்கை வரை சென்ற இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் உள்ள வரலாற்று சின்னங்கள் இலக்கிய தரவுகள் இவற்றை ஆய்வு எழுதியுள்ளார். தொடர்நது விஸ்வரூப யாத்திரை கோலாகலமாக நடத்தியதில் உறுதுணையாக இருந்த பல்வேறு குழுக்களுக்கும், மாறுவேட போட்டி, கோல போட்டிகளில் கலந்துகொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
The post ராமர் நடந்த பாதையில் ஆய்வு நூல் வெளியீடு appeared first on Dinakaran.