- எகனாபுரம்
- பரந்தூர் விமான நிலைய திட்ட நில அளவை அலுவலகம்
- காஞ்சிபுரம்
- விமான நிலைய திட்ட நில அளவை அலுவலகம்
- பரந்தூர்
- பசுமை விமான நிலையம்
- காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர்
- தின மலர்
காஞ்சிபுரம்: பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் திட்டத்திற்கு, நிலம் எடுப்பு அறிவிப்பு வெளியான நிலையில் ஏகனாபுரம் கிராமமக்கள் 200க்கும் மேற்பட்டோர் விமான நிலைய திட்ட நிலம் எடுப்பு அலுவலகத்தில் ஆட்சேபனை மனுவினை வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் அறிவித்து, கிராமப்புறங்களில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்புகளை நாளிதழ்களின் வெளியிட்டு, நிலம் எடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிப்பு வெளியிட்ட நாள்முதல் விலை நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படக்கூடிய ஏகனாபுரம் கிராமமக்கள், பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள 900 ஏக்கர் நிலங்களை எடுக்க நில எடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராமமக்கள், காரை பகுதியில் உள்ள தனி மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, (நில எடுப்பு) அலுவலகம் மண்டலம் என்ற இரண்டில் பரந்தூர் விமான நிலையம் அனைத்தும் திட்டத்திற்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனுக்களை வழங்கினர். இதைத்தொடர்ந்து, அலுவலகம் மண்டலம் என்ற இரண்டில் பரந்தூர் விமான நிலையம் அனைத்தும் திட்டத்திற்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சேபனை மனுக்களை வழங்கி வருகிறார்கள்.
The post பரந்தூர் விமான நிலைய திட்ட நிலம் எடுப்பு அலுவலகத்தில் ஆட்சேபனை மனு வழங்கிய ஏகனாபுரம் கிராமமக்கள் appeared first on Dinakaran.