×

அப்துல் கலாம் நினைவிடத்துக்கு இடம்: அரசாணைக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் அப்துல் கலாம் நினைவிடத்துக்கு இடம் ஒதுக்கியது தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அப்துல் கலாம் நினைவிடத்துக்கு 2016-ல் இடம் ஒதுக்கி பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாடசாமி கோயில், தெப்பக்குளம், சுனாமி குடியிருப்பு, சமுதாயக் கூடத்தை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாணையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் இடைக்காலத் தடை விதித்ததும், வழக்கு தொடர்பாக வருவாய்த்துறை செயலாளர், ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

The post அப்துல் கலாம் நினைவிடத்துக்கு இடம்: அரசாணைக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Abdul Kalam Memorial ,Eicourt branch ,Madurai ,Icourt Madurai branch ,Bakkarum, Ramanathapuram district ,Abdul ,Kalam ,memorial ,Matasamy ,Icourt Branch Order Banning Government ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு